வேலைவாய்ப்புத் தகவல்கள் - அறிமுகம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல் குர்ஆன் 4 : 114)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வேலை வாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த தளத்தை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எனவே நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இது சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவு எங்களோடு ஒத்துழைத்து பிறருக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் இருப்பினும் உரிய தொடர்பு மற்றும் விபரங்களை அளிப்பதாயின் உடனுக்குடன் அந்த தகவலை இதில் பதிவு செய்வோம்.

குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் அந்தந்த பதிவில் அதன் விபரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.

3 comments:

மஸ்தூக்கா said...

புகழ்ந்து எழுதப்படும் கருத்துக்கள் பதியப்படாது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். பயனடைந்த வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மேலும் பலரையும் ஊக்கப்படுத்தும் அல்லவா?
சரி புகழ்ந்து தான் எழுதக் கூடாது வேறு புதிய ஆலாசனைகளையாவது முன்வைக்கலாம் இல்லையா?
வேலைவாய்ப்புக்கான பதிவைப்போல் கல்வி வழிகாட்டுதல் குறித்த தகவல்களுக்கென தனியொரு பதிவை தொடங்கினால் மாணவ சமுதாயமும், மேற்கொண்டு தம் குழந்தைகளுக்கு எந்த வகையான உயர் கல்வியைத் தேர்வு செய்யலாம் எனத் தவிக்கும் பெற்றோரும் பயன்அடைவர். தவ்ஹீத் ஜமாஅத்தின் இணைய சேவைப் பிரிவு இதற்கான முயற்சியையும் முன்னெடுக்கட்டும்.

tntjjobs@gmail.com said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

இன்ஷா அல்லாஹ். நம்மால் முடிந்த அளவு எல்லா முயற்ச்சியும் மேற்கொள்ளப்படும்

பிறரது ஆலோசனைகளும் உதவிகளும் இன்றி இந்த காரியங்களை எளிதில் செய்துவிட முடியாது! எனவேதான் எல்லாவிதமான ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.

இதன் மூலம் பயனடைந்தவர்கள் நம்மிடம் தொடர்பு கொண்டு தக்க சான்றுகளுடன் அவர் கைப்பட நமக்கு எழுதும் விபரங்களை மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம். அதுவும் கூட பிறரை உக்கப்படுத்துவதற்காக மட்டுமே!

உங்கள் கருத்துக்கு நன்றி. அல்லாஹ் போதுமானவன்.

-வேலைவாய்ப்புத் தகவல் குழுமம்-

TNTJ said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பு சகோதரரே...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக ஏற்கனவே கல்வி வழிகாட்டுதல் குறித்த தகவல்களுக்கென தனியொரு
இனையதளம் இருகின்றது.

VISIT: www.tntjsw.blogspot.com

அண்புடன்,
இஸ்மாயில்,
துபை.